எழுதுதல் என்பது என் பல நாள் கனவு. படிப்பது பிடிக்கும், எழுத்தாளர்களின் படைப்பில் என்னைத் தொலைத்துவிடும் பேறு பெற்றவள் நான். அந்த மகிழ்ச்சியால் அடைந்த இருமாப்புடன் என் பக்கத்தைத் தொடங்குகிறேன்.
எழுதுவது எனக்கு ஒரு வடிகால் என்பதைக்காட்டிலும் பிறருக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்ற பேராசையும் எனக்கு உண்டு. அதே சமயத்தில் என் கருத்துகளைப் பிறரிடம் திணிக்கக் கூடாது என்பதிலும் எனக்கு உடன்பாடு உள்ளது. இந்தக் குழப்பத்தில் சிக்கித் தவித்த நான், (Excuse me, it is not that deep!!) என்று என் பிள்ளைகள் என்னிடம் சொல்வது என் காதுகளில் விழுகின்றன😁.
என் கருத்துகளைப் திணிப்பது என்பதைவிடுத்து என் கருத்துகளைப் பகிர்தல் என்று நினைத்து இந்தப் பயணத்தைத் தொடங்குகிறேன்.
என் பேனா, கட்டை விரல் சுட்டு விரல் நடு விரல்களுக்கு இடையே சிக்கித் தவிக்கும் தருணங்களை என்னுடன் இணைந்து என் நண்பர்களும் பார்த்திருக்கிறார்கள், அவர்களின் உந்துதலே இந்தப் பக்கத்திற்கான தொடக்கம் என்றும் கூறலாம்.
எழுத்தால் இணைவோம்! கருத்துகளைப் பகிர்வோம்! ❤️🌸


Leave a comment