எழுத்து என்று கூறிவிட்டேன், ஆனால் எழுதுதல் எங்கே?
மணலையும் நெற்பயிற்களையும் பரப்பி வைத்து அதில் எழுதத் தொடங்கினோம். தொடங்கிய அனைத்தையும் தொடர்கிறோமா என்பது மற்றொரு வினா.
“அ…அ…அ…” என்று நம் கைகளைப் பிடித்துக்கொண்டு நம் பெற்றோர் எழுத்துப் பயிற்சி கொடுத்தது நியாபகம் இருக்கிறதா?
அல்லது முந்தானை முடிச்சின் தமிழ் ஆசிரியராவது (நடிகை தீபா) நினைவிற்கு வருகிறாரா? ஹ..ஹ..ஹ..
“கையில் பேனாவை ஒழுங்காகப் பிடித்து எழுது!”
“கையால் எழுதினால்தான் தசை நார்கள் முழுமையான வளர்ச்சி அடையும்!”
என்றெல்லாம் சொல்லிக் கேட்டிருக்கிறோம். ஆனாலும் எழுத்தைப்பற்றி தொடங்கிய நானும் எழுதவில்லை! தட்டச்சிடுகிறேன், என்ன ஒரு முரண்?
அப்படியென்றால், எழுத்து வளர்ந்துவிட்டதா அல்லது தேய்ந்துவிட்டதா? எழுத்து என்ற சொல் நிற்கிறது ஆனால் அந்த அளவிற்கு எழுதுதல் நிற்குமா என்று தெரியவில்லை. தட்டச்சிடுதல் நிற்குமோ என்னவோ? அதற்கும் ஆபத்து வந்துவிட்டது, பேசினால் போதும் நம் கருத்துகளைக் கணினி தட்டச்சிட்டுவிடுமாமே!
மொழி, எழுத்து அனைத்தும் நம் கருத்துகளைப் பிறருக்குக் கடத்துவதற்கே!
நோக்கத்தை மறந்து வழி தவறுவதைவிட நோக்கத்தை நிறைவேற்ற காலத்திற்கு ஏற்ப வழிகளை மாற்றியமைத்துக் கொள்வோம்!
நீங்கள் எழுதுகிறீர்களா அல்லது தட்டச்சுதானா?
Leave a comment