குழப்பம்!

குழப்பம், எந்நொடியும் நம்முடன் தொத்திக்கொண்டிருப்பது. அதைப் பிரிந்து நம்மாலும் இருக்க முடியாது அதுவும் நம்மைப் பிரிந்து இருக்காது! படிக்கும்போதே நீங்கள் நினைக்கிறீர்கள், அப்படியா? குழப்பமும் நாமும் இரண்டற கலந்துவிட்டோமா?

செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவோ? கொஞ்சம் அதிகப்படியாகக் கூறிகிறோனா?
அப்படியே படிப்பதை நிறுத்திவிட்டு, உங்கள் மனவோட்டங்களைச் சற்று உன்னிப்பாகக் கவனியுங்கள்.

  • மதியம் என்ன சாப்பிடலாம்?
  • நாளைக்கு என்ன உடுத்திக்கொள்ளலாம்?
  • வாரயிறுதியில் எங்குச் செல்லலாம்?
  • பிள்ளைகளுக்கு என்ன தேர்வு?
  • நான் சொன்னது சரியா?
  • தான் செய்தது அவரைப் புண்படுத்தியதா?
    அப்பப்பா!!😎 எத்தனை எண்ணங்கள்? எத்தனை வினாக்கள்? இவற்றில் ஏதேனும் ஒன்றைப்பற்றிக்கூட நீங்கள் நினைக்கவில்லை என்றால் நீங்கள் பொய்யராகிவிடுவீர்கள்😁.
    இப்படிப் பட்டியலிடும் குழப்பத்திலிருந்து தப்பிக்கவே நாம் முன்னோக்கிச் செல்லும் வாழ்க்கை ஒரு பயணமாகிறது. பயணம் பந்தயமானதை மற்றொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம்.
    “எல்லாம் சரியாகிவிடும்!”
    “இதுவும் கடந்து போகும்” – இப்படிச் சொல்லித்தான் மனபாரத்தைக் குறைத்துக்கொள்கிறோம். அனைத்துக் குழப்பங்களையும் தாண்டி வாழ்க்கையெனும் பயணத்தின் (பந்தயத்தின்) வெற்றிக்கோட்டைக் கண்டிப்பாகத் தொடுவோம் 💪🏽 ஒவ்வொருவரும் அக்கோட்டைத் தொடுவதற்காக எடுத்துக்கொள்ளும் நேரமும் வழியும்தான் வேறுபடுகிறது. சிலருக்குக் கோடுகள் பக்கத்தில் சிலருக்குத் தொலைவில் மற்றும் சிலருக்குக் கானல்நீராகிறது 😢.
    குழப்பங்களைக் கடந்து வெற்றி பெறுவது என்பது நிச்சயம், இதைத் திடமாக நம்புவோம். அந்நம்பிக்கையே நம்மை நம் வெற்றிக் கோட்டிற்கு இட்டுச் செல்லும். வெற்றிக்கோட்டை அடைந்ததும் வாழ்க்கை முடியாது, தொடரோட்டம்போல் அடுத்த வெற்றிக்கோட்டை நோக்கிப் பயணிப்போம்🙌🏽

Responses

  1. Ganga Avatar

    பயணத்தில் ஒரு வெற்றிக் கோட்டை தொட்டவுடன் அடுத்த கோடு நம் கண்முன் நிற்கும். இதுதான் வாழ்க்கை.

    உங்கள் எழுத்துப் பயணத்திலே நானும் பாதையைத் தொடர்கிறேன்❤️

    Liked by 1 person

    1. Ashika Siddeeqa Avatar

      என் பயணத்தின் தொடக்கத்திற்கு நீங்களும் ஒரு முக்கிய காரணம் ❤️😍

      Like

  2. Body Soda Avatar

    குழப்பம் நம்மைப் பிரியாது” என்று சொல்லிவிட்டு, அதற்கு செம்புலப் பெயல்நீரை காதல் கவிதையை மேற்கோள் காட்டியிருக்கிறீர்கள் — குறுந்தொகைக்கு இவ்வளவு நாள் கழித்து இப்படி ஒரு “குழப்ப”பயன்பாடு வரும் என்று அந்தப் புலவர் நினைத்திருக்க மாட்டார்.

    மதியம் என்ன சாப்பிடுவது என்பதிலிருந்து பிள்ளைகளின் தேர்வு வரை ஒரே பட்டியலில் அடுக்கியிருக்கிறீர்கள் — “எல்லாம் சரியாகிவிடும்”, “இதுவும் கடந்து போகும்” — படித்து முடித்ததும் இரண்டு புதிய குழப்பங்கள் இலவசமாகக் கிடைத்தன, நன்றி.

    ஒரு வெற்றிக்கோட்டைத் தொட்டதும் அடுத்த கோட்டை நோக்கி ஓடச் சொல்கிறீர்கள் — அதாவது ஓய்வு என்பதே இல்லை.

    இந்தப் பந்தயத்தில் ஓய்வு கிடைக்கும் ஒரே இடம் இறுதியில்தான். 🙌🏽

    மொத்தத்தில், குழப்பத்தைப் பற்றிய தெளிவான கட்டுரை,

    குழப்பத்திற்கான தீர்வு — இன்னும் வேகமாக ஓடு.

    ஊக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி. 💪🏽

    Every morning in Africa, a gazelle wakes up. It knows it must run faster than the fastest lion or it will be killed.

    Every morning a lion wakes up. It knows it must outrun the slowest gazelle or it will starve to death.

    It doesn’t matter whether you are a lion or a gazelle: when the sun comes up, you’d better be running.

    ————African proverb.

    Liked by 1 person

Leave a comment